சினிமா செய்திகள்

80-களின் நாயகிகள் ஒன்று கூடி மகிழ்ச்சி + "||" + Heroines of the 80s Glad to have gathered together

80-களின் நாயகிகள் ஒன்று கூடி மகிழ்ச்சி

80-களின் நாயகிகள் ஒன்று கூடி மகிழ்ச்சி
சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, அம்பிகா. லிசி, சுஹாசினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்த நடிகைகள் சென்னையில் திடீரென்று ஒன்று கூடினார்கள்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகைகள் ராதிகா சரத்குமார், குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, அம்பிகா. லிசி, சுஹாசினி ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவரும் கதாநாயகிகளாக நடித்த காலத்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விருந்தும் சாப்பிட்டனர்.

இந்த சந்திப்பு புகைப்படங்களை ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, “1980-களில் கதாநாயகிகளாக நடித்த நாங்கள் எல்லோரும் இப்போதும் நெருங்கிய தோழிகளாக இருக்கிறோம். கொரோனாவால் நீண்ட நாட்களாக எங்களால் சந்திக்க முடியவில்லை. போனில் பேசி வந்தோம். தற்போது ஊரடங்கு தளர்வு அறிவித்து உள்ளதால் வார இறுதி நாளில் அனைவரும் நேரில் சந்தித்து பேசி மகிழ்ந்தோம்’’ என்றார்.