ஜோதிகா எனக்கு கிடைத்த ஆசீர்வாதம்: நடிகர் சூர்யா


ஜோதிகா எனக்கு கிடைத்த ஆசீர்வாதம்: நடிகர் சூர்யா
x
தினத்தந்தி 13 Sept 2021 4:34 AM IST (Updated: 13 Sept 2021 4:34 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்து 2006-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு தியா. தேவ் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். திருமண நாளையொட்டி ஜோதிகாவை பாராட்டி சூர்யா இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள பதிவில், ''நீ எனக்கு கிடைத்த ஆசிர்வாதம் ஜோதிகா. உங்கள் அனைவருடைய அன்புக்கும் மரியாதைக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார். ஜோதிகா வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘'சரியானவரை சந்திப்பது அவரவர் விதி. அவருக்கு மனைவியாவது நான் எடுத்த முடிவு. அதே நபருடன் ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் காதலில் விழுவது என்னையும் மீறிய செயல். அவர் அவராகவே இருப்பதால் அது நிகழ்கிறது. என் குழந்தைகளுக்கு சிறந்த தந்தையாக எனக்கு நல்ல கணவராக இருக்கிறார்’’ என்று குறிப்பிட்டு உள்ளார். சூர்யா தற்போது ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே படம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது
1 More update

Next Story