சினிமா செய்திகள்

விக்னேஷ் சிவனுக்கு புது பட்டம் கொடுத்த நயன்தாரா + "||" + Nayanthara who gave a new title to Vignesh Shiva

விக்னேஷ் சிவனுக்கு புது பட்டம் கொடுத்த நயன்தாரா

விக்னேஷ் சிவனுக்கு புது பட்டம் கொடுத்த நயன்தாரா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் காமெடி ரொமான்ஸ் படமாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முதல் பாடல், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அப்டேட்டை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 18-ம் தேதி ‘டூ.. டூ.. டூ’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த டுவிட்டில் விக்னேஷ் சிவனை ‘அன்பான டைரக்டர்’ என குறிப்பிட்டுள்ளார். இது நயன்தாரா கொடுத்த புதுபட்டம் என கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கடந்த ஆண்டு மாணவர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக பட்டம் வழங்கப்படும்
ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கடந்த ஆண்டு மாணவர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக பட்டம் வழங்கப்படும் சட்டசபையில் மசோதா அறிமுகம்.
2. 67 வயதில் பி.எச்டி. பட்டம்
இளமை பருவத்தில் கைவிட்ட கல்வியை முதுமை பருவத்தில் கற்றுத்தேர்ந்து இன்றைய இளம் தலைமுறையினருக்கு கல்வியின் மகத்துவத்தை உணர வைத்துக்கொண்டிருக்கிறார்கள், 60 வயதை கடந்த முதியோர்கள்.