சினிமா செய்திகள்

டெட்பாடியாக நடிக்க சிவாவிடம் டவுட் கேட்ட பிரபல நடிகை + "||" + Famous actress who asked Dowd to marry Siva

டெட்பாடியாக நடிக்க சிவாவிடம் டவுட் கேட்ட பிரபல நடிகை

டெட்பாடியாக நடிக்க சிவாவிடம் டவுட் கேட்ட பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நடிகை ஒருவர் டெட்பாடியாக நடிக்க சிவாவிடம் நிறைய டவுட் கேட்டு இருக்கிறார்.
ஸ்கீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடேட் தயாரிப்பில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ஹாரர் காமெடி திரைப்படம் “இடியட்”. ‘தில்லுக்கு துட்டு’ இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் கலக்கல் கமர்ஷியல் மசாலா திரைப்படமாக, இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராம்பாலா. விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.


இதில் சிவா பேசும்போது, ‘கொரோனா உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் ராம்பாலா சார் இந்தப்படத்தை பற்றி சொன்னார், ஆனால் அப்படிப்பட்ட நேரத்திலும் அனைவரையும் ஒன்று சேர்த்து படத்தை துவக்கி விட்டார் தயாரிப்பாளர் சுந்தர். நிக்கி கல்ராணி போல அர்ப்பணிப்பு கொண்ட நடிகையை, பார்க்க முடியாது. ஒரு காட்சியில் அவர் டெட்பாடியாக இருக்க வேண்டும், ஆனால் அதற்கே நிறைய டவுட் கேட்டார். அந்தளவு சீரியஸான நடிகை.

டீம் கேப்டன் நன்றாக இருந்தால் தான் எல்லோரும் நன்றாக இருக்க முடியும். எங்கள் டீமிலேயே பெரிய ‘இடியட்’ ராம்பாலா சார் தான். உண்மையிலேயே அவரின் உழைப்பு அவர் அமைக்கும் காட்சிகள் எல்லாமே அட்டகாசமாக இருக்கும். இன்னும் நிறைய படங்கள் அவர் செய்ய வேண்டும். தியேட்டரில் தான் இந்தப்படத்தை வெளியிட வேண்டும் என்றார் தயாரிப்பாளர், அவரின் நம்பிக்கைக்கு நன்றி. ஒரு பேய் எப்போதும் இருட்டில், மியூசிக்கில் பயமுறுத்தும் ஆனால் அது இந்தப்படத்தில் இருக்காது. அதனால் தான் இந்தப்படத்தை ஒப்புக்கொண்டேன். படத்தின் ரகசியத்தை சொல்லிவிட்டேன் ஆனாலும், இந்தப்படம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் நன்றி’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாடகரை மணக்கும் நடிகை
தமிழில் ஓவியாவுடன் கணேசா மீண்டும் சந்திப்போம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தேவிகா நம்பியார்.
2. விஜய் படத்தில் புதுமுக நடிகை
விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் கேரளாவை சேர்ந்த அபர்ணா தாஸ் தமிழில் அறிமுகமாகிறார்.
3. பண கஷ்டத்தை சந்தித்த நடிகை
தமிழில் ஆஹா கல்யாணம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் வாணி கபூர்.
4. திருமணத்தை தனுஷ் பட நடிகை நிறுத்தியது ஏன்?
தமிழில் தனுஷ் ஜோடியாக பட்டாஸ் படத்தில் நடித்து பிரபலமானவர் மெஹ்ரீன், நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.
5. காரை சுற்றி வளைத்ததால் சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட பிரபல ரவுடி
காரை சுற்றி வளைத்ததால் சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட பிரபல ரவுடியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். முன்னதாக போலீசாரிடம் இருந்து தப்பிக்க மேம்பாலத்தில் இருந்து குதித்ததால் அவரது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.