ஜெயலலிதா வாழ்க்கை தலைவி படத்தின் 2-ம் பாகம் வருமா?


ஜெயலலிதா வாழ்க்கை தலைவி படத்தின் 2-ம் பாகம் வருமா?
x
தினத்தந்தி 14 Sep 2021 12:50 PM GMT (Updated: 2021-09-14T18:20:11+05:30)

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை படமாக தயாராகி திரைக்கு வந்துள்ள தலைவி படத்துக்கு அரசியல் வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை படமாக தயாராகி திரைக்கு வந்துள்ள தலைவி படத்துக்கு அரசியல் வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் வந்த கங்கனா ரணாவத் கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. இதில் எம்.ஜி.ஆராக அரவிந்தசாமி நடித்துள்ளார். விஜய் இயக்கி உள்ளார். இந்த நிலையில் தலைவி 2-ம் பாகத்தை எடுக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2-ம் பாகத்தில் முழுக்க ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை, முதல்-அமைச்சராக இருந்து நிறைவேற்றிய திட்டங்கள். சொத்து குவிப்பு வழக்கில் கைதான நிகழ்வுகள், மீண்டும் தேர்தலில் நின்று ஆட்சியை கைப்பற்றியது, இறுதியில் மரணத்தில் ஏற்பட்ட சர்ச்சைகள் வரை உள்ள சம்பவங்கள் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

விரைவில் 2-ம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைவி படத்தின் வசன கர்த்தா மதன் கார்க்கி ஏற்கனவே அளித்த பேட்டியில், “தலைவி படத்தில் இடம்பெற வேண்டிய சில சுவாரசியமான தகவல்களை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தலைவி 2-ம் பாகம் எடுத்தால் அந்த தகவல்கள் படத்தில் சேர்க்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

Next Story