நடிகர் சல்மான்கானுக்கு ரூ.350 கோடி சம்பளம்

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு நாடு முழுவதும் வரவேற்பு உள்ளது. வெளிநாடுகளிலும் விரும்பி பார்க்கிறார்கள். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
தமிழ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசனும், தெலுங்கு நிகழ்ச்சியை நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்குகின்றனர். இந்தியில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் 14-வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து தற்போது 15-வது சீசன் தொடங்க உள்ளது. ஒவ்வொரு சீசனுக்கும் சல்மான்கானுக்கு வழங்கும் சம்பளம் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் 15-வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை 14 வாரங்கள் தொகுத்து வழங்க சல்மான்கானுக்கு ரூ.350 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சல்மான்கான் இந்தியில் ஒரு படத்தில் நடிக்க ரூ.50 கோடி சம்பளம் வாங்குகிறார். படத்தின் வசூலிலும் பங்கு கொடுக்கப்படுகிறது. சல்மான்கான் தற்போது டைகர் 3 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தயாராகி உள்ளார்.
Related Tags :
Next Story