வெப் தொடரில் ரெஜினா

ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் நடிகர்- நடிகைகள் பலரும் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள்.
சூர்யா, விஜய்சேதுபதி, பிரசன்னா, பாபி சிம்ஹா, பிரியாமணி, நிக்கி கல்ராணி, நித்யா மேனன், ராணா, ஜெகபதி பாபு அபிஷேக் பச்சன், ஜாக்கி ஷெராப், கியூமா குரோஷி, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் வெப் தொடர்களில் நடித்து உள்ளனர். தற்போது நடிகை ரெஜினாவும் வெப் தொடருக்கு வந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த தொடர் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகிறது. இதில் விஜய்சேதுபதி, ராஷிகன்னா, ஷாகித் கபூர் ஆகியோரும் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. ராஜ் மற்றும் டி.கே. ஆகியோர் இயக்குகிறார்கள்.
இவர்கள் இயக்கத்தில் வந்த பேமிலிமேன் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் இந்த தொடருக்கும் எதிர்பார்ப்பு உள்ளது. இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி உள்ளது. ரெஜினா தமிழில் கண்ட நாள் முதல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமவுலி, கசட தபற உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது 4 புதிய தமிழ் படங்களிலும், 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
Related Tags :
Next Story