நீண்டகால கனவு நிறைவேறியது மும்பை நடிகையின் ஆசையை நிறைவேற்றிய தமிழ் டைரக்டர்


நீண்டகால கனவு நிறைவேறியது மும்பை நடிகையின் ஆசையை நிறைவேற்றிய தமிழ் டைரக்டர்
x
தினத்தந்தி 26 Sept 2021 2:18 PM IST (Updated: 26 Sept 2021 2:18 PM IST)
t-max-icont-min-icon

நீண்டகால கனவு நிறைவேறியது மும்பை நடிகையின் ஆசையை நிறைவேற்றிய தமிழ் டைரக்டர்.

ரிசி ரிச்சர்டு - மும்பை அழகி தர்ஷாகுப்தா ஜோடியாக நடித்த ‘ருத்ரதாண்டவம்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் தர்ஷாகுப்தா கலந்துகொண்டு பேசினார்.

“நான் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் அறிமுகமானேன். ஆனால் என் நீண்ட கால ஆசை, திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான். அதிலும் ஒப்பனையே இல்லாமல், கிராமத்து பெண் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை. என் நீண்ட கால கனவை டைரக்டர் மோகன்ஜி ‘ருத்ரதாண்டவம்’ படத்தின் மூலம் நிறைவேற்றி இருக்கிறார்.

இந்த படத்தில், ஒரு கிராமத்து பெண்ணாக அழுத்தமான வேடத்தில் நடித்து இருக்கிறேன். அது சவாலானதாக இருந்தது” என்றார், தர்ஷா குப்தா.
1 More update

Next Story