டூடுல் வெளியிட்டு சிவாஜி கணேசனை கவுரவித்த கூகுள்


டூடுல் வெளியிட்டு சிவாஜி கணேசனை கவுரவித்த கூகுள்
x
தினத்தந்தி 1 Oct 2021 11:59 PM GMT (Updated: 1 Oct 2021 11:59 PM GMT)

இந்தியாவின் புகழ் பெற்ற நடிகரான சிவாஜி கணேசன் பிறந்த நாளையொட்டி நேற்று ஓவியத்தில் வரைந்த அவரது புகைப்படத்தையும் டூடுல் வெளியிட்டு கூகுள் கவரவித்தது.

உலக அளவில் புகழ் பெற்ற தலைவர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் பிறந்த நாள் விழாக்களையொட்டி அவர்களின் புகைப்படங்களை கூகுள் டூடுல் வெளியிடுவது வழக்கம். கூகுள் தேடலின் முகப்பு பக்கத்தில் இந்த புகைப்படம் இடம்பெறும். இந்த நிலையில் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள், தாதா சாகேப் பால்கே, செவாலியர் பட்டம் உள்ளிட்ட பல உயரிய விருதுகளை பெற்ற இந்தியாவின் புகழ் பெற்ற நடிகரான சிவாஜி கணேசன் பிறந்த நாளையொட்டி நேற்று ஓவியத்தில் வரைந்த அவரது புகைப்படத்தையும் டூடுல் வெளியிட்டு கூகுள் கவரவித்தது.

டூடுலில் சிவாஜியின் மூன்று தோற்றங்கள் அடங்கிய ஓவியங்களும் அதன் பின்னணியில் படச்சுருளும் இடம்பெற்று இருந்தன. டூடுலில் சிவாஜியை பார்த்த சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.

இந்த டூடுலை சிவாஜிகணேசன் பேரனும் நடிகர் பிரபுவின் மகனுமான நடிகர் விக்ரம் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், ‘‘சிவாஜிகணேசனின் 93-வது பிறந்த நாளையொட்டி கூகுள், டூடுல் வெளியிட்டு கவுரவித்து உள்ளது. கூகுள் இந்தியாவுக்கு நன்றி. இது இன்னொரு பெருமை மிகுந்த தருணம். அவரை இன்றும் நேசிக்கிறேன். அவரை இழந்த வலி வருடந்தோறும் கூடுகிறது” என்று கூறியுள்ளார்.

Next Story