அண்ணாத்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியானது

அண்ணாத்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியானது
x
தினத்தந்தி 4 Oct 2021 2:32 PM GMT (Updated: 4 Oct 2021 2:32 PM GMT)

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் முதல் சிங்கிளான அண்ணாத்த அண்ணாத்த என்ற பாடல் இன்று வெளியானது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் முதல் சிங்கிளான அண்ணாத்த அண்ணாத்த என்ற பாடல் இன்று வெளியானது. 

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை டைரக்டர்  சிவா இயக்குகிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார். மேலும், படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடிக்கின்றனர்

முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்  விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

டி.இமான் இசையில் கவிஞர் விவேகா எழுதியுள்ள இந்த பாடலை மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். எனவே இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

Next Story