சினிமா செய்திகள்

நாகசைதன்யாவுக்கு மீண்டும் காதல்? + "||" + Love again for Naga Chaitanya?

நாகசைதன்யாவுக்கு மீண்டும் காதல்?

நாகசைதன்யாவுக்கு மீண்டும் காதல்?
சமந்தாவை பிரிந்த கையோடு நாகசைதன்யாவுக்கு இன்னொரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு இருப்பதாக தெலுங்கு பட உலகில் பேச்சு கிளம்பி உள்ளது.
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 7 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த மாதம் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கணவரை பிரிந்த பிறகு சமந்தா தீவிரமாக படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணமும் சென்று வந்தார். தற்போது தெலுங்கு படமொன்றில் கவர்ச்சியாக குத்தாட்ட நடனம் ஆடவும் ஒப்புக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமந்தாவின் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு முதல் தடவையாக நாகசைதன்யா தற்போது இன்ஸ்டாகிராமில், ‘‘என் வாழ்க்கைக்கு ஒரு காதல் கடிதம்” என்ற பதிவை வெளியிட்டு உள்ளார்.

இதையடுத்து சமந்தாவை பிரிந்த கையோடு நாகசைதன்யாவுக்கு இன்னொரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு இருப்பதாக தெலுங்கு பட உலகில் பேச்சு கிளம்பி உள்ளது. சமூக வலைத்தளத்திலும் நாகசைதன்யாவுக்கு புதிய காதல் மலர்ந்துள்ளதா? பெண் யார் என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.