சினிமா செய்திகள்

கமலின் விக்ரம் படம் ரிலீஸ் எப்போது? + "||" + When will Kamal's Vikram movie be released?

கமலின் விக்ரம் படம் ரிலீஸ் எப்போது?

கமலின் விக்ரம் படம் ரிலீஸ் எப்போது?
விக்ரம் படம் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. மார்ச் மாதம் இறுதியில் விக்ரம் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கைதி, மாஸ்டர் படங்களை எடுத்து பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட 7 நடிகர்கள் கமலுக்கு வில்லனாக நடிக்கின்றனர். இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது. விக்ரம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் முடிந்துள்ளன. மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அடுத்த மாதம் முழு படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் விக்ரம் படம் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. பிப்ரவரி மாதம் வெளியாகலாம் என்று பேசப்பட்டது. தற்போது மார்ச் மாதம் இறுதியில் விக்ரம் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்துக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கும் படத்திலும். பிரபல மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்திலும் கமல்ஹாசன் அடுத்தடுத்து நடிக்க உள்ளார். இந்தியன்-2 படத்திலும் நடிக்க இருக்கிறார். பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது.