கதாநாயகிகளை கொண்டாடும் சினிமா - ராஷ்மிகா மகிழ்ச்சி


கதாநாயகிகளை கொண்டாடும் சினிமா - ராஷ்மிகா மகிழ்ச்சி
x
தினத்தந்தி 25 Nov 2021 7:11 AM GMT (Updated: 25 Nov 2021 7:11 AM GMT)

ஹீரோக்களுக்கு சமமான கேரக்டர் ஹீரோயினுக்கும் கிடைக்கிறது. இதனாலேயே இப்போது கதாநாயகிகள் கொண்டாடப்படுகின்றனர் என ராஷ்மிகா மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபலமான கதாநாயகியாக மாறி இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். சினிமாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தனது கருத்தை அவர் பகிர்ந்துள்ளார். ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில், ‘‘இப்போது கதாநாயகிகளின் அணுகுமுறைகள் மாறிவிட்டன. இதற்கு முன் கதாநாயகிகள் சினிமாவில் தங்கள் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று எதிர்பார்ப்பது இல்லை. பிரபல பட தயாரிப்பு நிறுவனம், பெரிய நடிகர்கள் இருந்தால் போதும் என நினைத்தார்கள். ஒரு பாடல் காட்சியில் நடிக்கவும் தயாரானார்கள். நடிப்புக்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும் ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால் இப்போது வித்தியாசமாக யோசிக்கிறார்கள். ஹீரோக்களுக்கு சமமான கேரக்டர் ஹீரோயினுக்கும் கிடைக்கிறது. தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை எடுக்க முன்வருகிறார்கள். ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாவிட்டால் ரசிகர்கள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அவர்களும் தெரிந்து கொண்டார்கள். இதனாலேயே இப்போது கதாநாயகிகள் கொண்டாடப்படுகின்றனர். அவர்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களும் அதிகம் வருகின்றன” என்று மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

Next Story