ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா

‘தி மேட்ரிக்ஸ்' படத்தின் 4-ம் பாகம் ‘தி மேட்ரிக்ஸ்: ரிசர்ரக் ஷன்ஸ்’ என்ற பெயரில் தயாராகி உள்ளது. இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
கெனு ரீவ்ஸ் நடித்து 1999-ல் வெளியான ‘தி மேட்ரிக்ஸ்’ படம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது. வக்காவ்ஸ்கி சகோதரிகள் இயக்கி இருந்தனர். இந்த படத்தின் அடுத்த பாகங்களாக 2003-ல் ‘தி மேட்ரிக்ஸ் ரீலோடட்' என்ற படமும், அதே ஆண்டு இறுதியில் ‘தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸ்' என்ற படமும் வெளியாகி வசூல் குவித்தன.
தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு ‘தி மேட்ரிக்ஸ்' படத்தின் 4-ம் பாகம் ‘தி மேட்ரிக்ஸ்: ரிசர்ரக் ஷன்ஸ்’ என்ற பெயரில் தயாராகி உள்ளது. இதில் கெனு ரீவ்ஸ், கேரி ஆன் மோஸ் உள்ளிட்டோர் மீண்டும் நடித்து உள்ளனர்.
இவர்களுடன் இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அவரது கதாபாத்திரம் பற்றி படக்குழுவினர் எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்தனர்.
இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். பிரியங்கா சோப்ராவும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் அவர் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார். இந்த போஸ்டர் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தி மேட்ரிக்ஸ் 4-ம் பாகம் படம் அடுத்த மாதம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
Related Tags :
Next Story