சினிமா செய்திகள்

காதலில் விழுந்த ராஷ்மிகா + "||" + Rashmika who fell in love

காதலில் விழுந்த ராஷ்மிகா

காதலில் விழுந்த ராஷ்மிகா
ராஷ்மிகா தற்போது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு பரபரப்பாகி உள்ளது. அதை வைத்து அவர் நடிகர் விஜய்தேவர கொண்டாவுடன் காதலில் விழுந்துள்ளதாக தெலுங்கு பட உலகினர் கிசுகிசுக்கின்றனர்.
தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமீபத்தில் ரசிகர்கள் அதிகம் விரும்பும் கதாநாயகிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்து இருந்தார். இந்தி, கன்னட மொழி படங்களிலும் நடிக்கிறார். சமூக வலைத்தளத்திலும் சுறுசுறுப்பாக இருக்கிறார். அதில் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் ராஷ்மிகா தற்போது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு பரபரப்பாகி உள்ளது. அதை வைத்து அவர் நடிகர் விஜய்தேவர கொண்டாவுடன் காதலில் விழுந்துள்ளதாக தெலுங்கு பட உலகினர் கிசுகிசுக்கின்றனர். 

ராஷ்மிகா வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நான் எங்கு செல்கிறேன் சொல்லுங்கள் பார்க்கலாம் என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியதோடு உங்களை விட்டு தூரமாக செல்கிறேன். ஆனால் விரைவில் திரும்பி வந்து விடுவேன்” என்று குறிப்பிட்டு உள்ளார். அமெரிக்காவில் லைகர் தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள நடிகர் விஜய்தேவரகொண்டாவை சந்திக்கவே ராஷ்மிகா செல்கிறார் என்று ரசிகர்கள் பதில் அளித்துள்ளனர். இருவரும் ரகசியமாக காதலிப்பதாகவும் விரைவில் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர் என்றும் தெலுங்கு பட உலகினர் பேசி வருகிறார்கள்.