சினிமா செய்திகள்

700 வருட பழைய கோட்டையில் கத்ரீனா கைப்பின் ஆடம்பர திருமணம் + "||" + The wedding of Katrina Kaif and Vicky Kaushal to take place in this 700-year-old royal castle in Rajasthan

700 வருட பழைய கோட்டையில் கத்ரீனா கைப்பின் ஆடம்பர திருமணம்

700 வருட பழைய கோட்டையில் கத்ரீனா கைப்பின் ஆடம்பர திருமணம்
சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் கத்ரீனா கைப்பின் ஆடம்பர திருமண விழா நடைபெற உள்ளது.
பிரபல இந்தி நடிகை கத்ரீனா கைப், நடிகர் விக்கி கவுசல் ஆடம்பர திருமண ஏற்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. இவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து தற்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். ராஜஸ்தானில் உள்ள 700 வருட பழமையான சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் வருகிற 9-ந் தேதி திருமணத்தை நடத்த உள்ளனர். அந்த கோட்டை கோடிக்கணக்கான செலவில், மலர்கள், வண்ண விளக்குகள் மற்றும் வரவேற்பு வளைவுகளால் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள், நடிகர், நடிகைகள் அழைக்கப்பட்டு உள்ளனர். திருமணத்துக்காக மணமக்கள் தங்கும் சொகுசு விடுதியின் ஒரு நாள் வாடகை ரூ.4 லட்சம். மேலும் உறவினர்கள், நடிகர் நடிகைகள் தங்க அங்குள்ள ஆடம்பர ஓட்டல்களின் அறைகள் அனைத்தையும் முன்பதிவு செய்துள்ளனர். 

திருமணத்துக்கு ஷாருக்கான், அமீர்கான், ரன்பீர்கபூர், அலியாபட் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் அழைக்கப்பட்டு உள்ளனர். கத்ரீனா கைப்பின் முன்னாள் காதலரான சல்மான்கான் அழைக்கப்படவில்லை. சங்கீத், மெகந்தி என்று தொடர்ந்து 3 நாட்கள் ஆடம்பரமாக திருமண விழா நடைபெற உள்ளது. திருமணத்துக்கு வருபவர்கள் செல்போன், கேமரா கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.