'தி கிரே மேன்' திரைப்படத்திற்காக லண்டன் சென்றார் நடிகர் தனுஷ்
'தி கிரே மேன்' திரைப்படத்தின் எஞ்சிய காட்சிகளின் படப்பிடிப்பிற்காக நடிகர் தனுஷ் லண்டன் சென்றுள்ளார்.
சென்னை,
கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர்', 'சிவில் வார்', 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்' மற்றும் 'எண்ட் கேம்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய அந்தோனி மற்றும் ஜோ ரூஸோ இயக்கி வரும் 'தி கிரே மேன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார்.
'தி கிரே மேன்' திரைப்படத்தில் நடிகர் ரியான் கோஸ்லிங் (பிளேட் ரன்னர்) மற்றும் கிறிஸ் எவன்ஸ் (கேப்டன் அமெரிக்கா) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், அனா டி அர்மாஸ், ஜெசிகா ஹென்விக், வாக்னர் மவுரா, மற்றும் ஜூலியா பட்டர்ஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே 'தி கிரே மேன்' திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை நடித்து முடித்து விட்டார் தனுஷ். இந்த நிலையில், தற்போது படத்தில் மீதமுள்ள சில காட்சிகளை முடித்து கொடுப்பதற்காக லண்டனில் உள்ள படத்தின் செட்டிற்கு நடிகர் தனுஷ் சென்றுள்ளார்.
தமிழில் டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்க இருக்கிறது. இதனால் 'தி கிரே மேன்' படத்தின் காட்சிகளை முடித்து கொடுத்துவிட்டு விரைவில் சென்னை திரும்ப இருக்கிறார் நடிகர் தனுஷ்.
A little more Gray Man … pic.twitter.com/roRSybi9fQ
— Dhanush (@dhanushkraja) December 7, 2021
Related Tags :
Next Story