பிரபுதேவாவின் ‘மை டியர் பூதம்’ போஸ்டர் வெளியீடு


பிரபுதேவாவின் ‘மை டியர் பூதம்’ போஸ்டர் வெளியீடு
x
தினத்தந்தி 10 Dec 2021 12:16 PM IST (Updated: 10 Dec 2021 12:16 PM IST)
t-max-icont-min-icon

பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ள இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.

சென்னை,

பிரபுதேவா நடிப்பில் ‘தேள்’, ‘பஹீரா’, ‘யங் மங் சங்’ உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. இதில் ‘தேள்’ படம் இன்று (டிசம்பர் 10) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுப் பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

இது தவிர்த்து இந்தியில் ஷிஷ் குமார் துபே இயக்கத்தில் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபுதேவா. இப்படத்துக்கு ‘ஜர்னி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

பா. விஜய் இயக்கத்தில் பெயரிடாதப்படம், ’பஹீரா’, ’பொய்க்கால் குதிரை’, கல்யாணின் பெயரிடாதப் உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. 

இந்த நிலையில், ராஜவன் இயக்கத்தில் ‘மை டியர் பூதம்’ படத்திலும் நடித்து வருகிறார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக இப்படத்தை ரமேஷ் பிள்ளை தயாரிக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. பூதமாக நடித்து பிரபுதேவா கவனம் ஈர்க்கிறார்.இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த போஸ்டரை  நடிகர் பிரபுதேவா தனது டுவிட்டர்  பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.பிரபுதேவா நடிப்பில் கடைசியாக ‘பொன் மாணிக்கவேல்’வெளியானது குறிப்பிடத்தக்கது.


Next Story