'பீஸ்ட்' படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் விஜய்
பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய் தனது படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார்.
சென்னை
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘பீஸ்ட்’. நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
காதல், நகைச்சுவை, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் தனது படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார் . இதனை படக்குழு அறிவித்துள்ளது.
Here’s a special moment from Thalapathy @actorvijay’s last day of shoot for #Beast with director @Nelsondilpkumar@hegdepooja@anirudhofficial@manojdft@nirmalcuts@anbariv#BeastShootWrappic.twitter.com/6f2Tj2a4lE
— Sun Pictures (@sunpictures) December 11, 2021
Related Tags :
Next Story