‘பீஸ்ட்’ படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே


‘பீஸ்ட்’ படப்பிடிப்பை முடித்த பூஜா ஹெக்டே
x
தினத்தந்தி 12 Dec 2021 3:30 PM IST (Updated: 12 Dec 2021 3:30 PM IST)
t-max-icont-min-icon

நடிகை பூஜா ஹெக்டே தனது காட்சிகளில் நடித்து முடித்துவிட்டு விடைபெறுவதாக அறிவித்து உள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வி.டி.வி.கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். அதிரடி சண்டை படமாக பீஸ்ட் உருவாவதாகவும், இதில் விஜய் ராணுவ அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ‘பீஸ்ட்' படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பு பற்றி படக்குழுவினர் பகிர்ந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலானது. 

படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டே தனது காட்சிகளில் நடித்து முடித்துவிட்டு விடைபெறுவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில் பூஜா ஹெக்டே பேசும்போது, “பீஸ்ட் படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு காட்சியிலும் ரசித்து நடித்தேன். படப்பிடிப்பில் நிறைய சிரிக்க வைத்தோம். நீங்களும் படத்தை பார்த்து சிரிப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பீஸ்ட் படம் இயக்குனர் நெல்சன் ஸ்டைலிலும், விஜய் ஸ்டைலிலும் உருவாகி உள்ளது. முழுக்க பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படமாக இருக்கும், இவர்கள் இருவருடனும் பணியாற்றியது பெருமையாக உள்ளது என்றார். பூஜா ஹெக்டே தெலுங்கில் நடித்துள்ள ராதே ஷியாம், ஆச்சார்யா ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.


Next Story