பெரிய தொகை வாங்கிக் கொண்டு ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார், சமந்தா
ஒரு புதிய படத்தில் நடிகை சமந்தா பெரிய தொகை வாங்கி கொண்டு ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார்.
கணவரைப் பிரிந்த சமந்தா இப்போது தனிமையில் வாழ்கிறார். முக்கிய முடிவுகளை அவரே எடுக்கிறார். ஏற்கனவே கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சி அடைய செய்த அவர், தற்போது ஒரு புதிய படத்துக்காக ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். இதற்காக அவருக்கு ஒரு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.
சமந்தாவின் கவர்ச்சி நடனம் இடம்பெறும் படத்தின் பெயர், ‘புஷ்பா தி ரைஸ் பாகம்-1’. இதில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். கதாநாயகி ராஷ்மிகா மந்தனா. பஹத் பாசில், ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சுகுமார் டைரக்டு செய்திருக்கிறார். தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி இருக்கிறது. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் மதுரை சுற்றுவட்டாரங்களில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தை தமிழ்நாடு முழுவதும் ஸ்ரீலட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது.
Related Tags :
Next Story