புதிய திரைக்கதை பாணியில் ‘ஆர் 23, கிரிமினல்ஸ் டைரி’
கவுதம் ராகவேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள திகில் படத்துக்கு ‘ஆர் 23, கிரிமினல்ஸ் டைரி’ என்று புதுமையாக பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதுபற்றி அதன் டைரக்டர் கவுதம் ராகவேந்திரா கூறுகிறார்:
“இந்த படத்தின் டைட்டில் மட்டுமல்ல... திரைக்கதை பாணியும் புதுமையாக இருக்கும். திரைக்கதையில் இது ஒரு புதிய முயற்சி என்று சொல்லலாம். இந்த மாதிரி குற்றப்பின்னணியிலான திகில் படம், தமிழ் சினிமாவில் அதிகம் வந்ததில்லை.
படம் பார்ப்பவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் ‘திக் திக்’ என்று இருக்கும். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை தவற விடாமல் பார்த்தால்தான், கதையில் உள்ள மர்மம் புரியும்.
புது கதாநாயகர்கள் ராகேஷ், சேது, யாசிகா, பவித்ர லட்சுமி, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை ஜெனிஷ் வெளி யிடுகிறார்”.
Related Tags :
Next Story