நயன்தாரா திரைப்படத்தில் நடிக்கும் பிரபல யூடியூப் குழந்தை நட்சத்திரம் ரித்விக்..!


நயன்தாரா திரைப்படத்தில் நடிக்கும் பிரபல யூடியூப் குழந்தை நட்சத்திரம் ரித்விக்..!
x
தினத்தந்தி 22 Dec 2021 9:13 AM IST (Updated: 22 Dec 2021 9:13 AM IST)
t-max-icont-min-icon

யூடியூப் மூலம் பிரபலமான குழந்தை நட்சத்திரம் ரித்விக் நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தில் நடிக்கிறார்.

சென்னை,

நடிகை நயன்தாரா அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறது. இதன்பிறகு சாருக்கானுடன் இணைந்து நடிக்கும் பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக நயன்தாரா கதாநாயகியை மையமாகக் கொண்ட கதையம்சம் உள்ள திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு 'ஓ2'  (ஆக்சிஜன்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. டீரிம் வரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர்களில் ஒருவரான ஜி.கே. விக்னேஷ் என்பவர் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், பிரபல யூடியூப் குழந்தை நட்சத்திரம் ரித்விக் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ரித்விக் ஏற்கெனவே யூடியூப்பில் ஒரே ஆளாக ஆண், பெண், இளமை, மற்றும் வயதான நபர் என்று பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். 

சமீப காலமாக நயன்தாராவின் திரைப்படங்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story