அவசர... அவசரமாக... பீஸ்ட் படத்தின் டப்பிங்கை முடித்த விஜய்...!


அவசர... அவசரமாக... பீஸ்ட் படத்தின் டப்பிங்கை முடித்த விஜய்...!
x
தினத்தந்தி 22 Dec 2021 2:25 PM IST (Updated: 22 Dec 2021 2:25 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஜய் 'பீஸ்ட்' திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை விரைவாக முடித்துவிட்டார்.

சென்னை,

நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவடைந்ததை, படப்பிடிப்பில் இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் விஜய் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு படக்குழு அறிவித்தது. அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை விரைவாக முடித்துவிட்டார். நடிகர் விஜய் தன்னுடைய குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட விடுமுறைக்காக லண்டன் செல்ல இருப்பதாலேயே டப்பிங் பணிகளை விரைவாக முடித்ததாக காரணம் கூறப்பட்டுள்ளது.

மேலும், நடிகர் விஜய்-க்கு படத்தில் நீளமான வசனங்கள் எதுவும் இல்லாததாலும் நகைச்சுவையான சிறிய சிறிய வசனங்களே படத்தில் இருப்பதாலும் விரைவாக டப்பிங் பணிகள் முடிந்தது என்றும் கூறப்படுகின்றன. ரசிகர்கள் புதுவருடத்தில் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

சமீபத்தில் படத்தின் பாடல் புரோமோவிற்காக நடிகர் விஜய், சிவகார்த்திகேயன், அனிருத், மற்றும் இயக்குனர் நெல்சன் இணைந்து இருக்கும் காட்சிகள் பிரத்யேகமாக படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story