சமுத்திரக்கனி, கதிர் நடிக்கும் 'தலைக்கூத்தல்' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்..!
நடிகர் சமுத்திரக்கனி மற்றும் கதிர் இணைந்து நடிக்கும் 'தலைக்கூத்தல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
சென்னை,
நடிகர் சமுத்திரக்கனி தற்போது பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் 'ரைட்டர்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் நடிகர் சமுத்திரக்கனி அடுத்ததாக நடிக்கும் 'தலைக்கூத்தல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் ஜெய பிரகாஷ் இயக்கி உள்ளார். சசிகாந்தின் ஒய்நாட் ஸ்டுடியோஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனியுடன் இணைந்து 'பரியேறும் பெருமாள்' புகழ் கதிர் மற்றும் நடிகை வசுந்தரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிற நடிகர் நடிகையர் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
Glad to announce our next #YNOT21 - “Thalaikoothal” has commenced filming today. #Thalaikoothal is written and directed by @JPtheactor starring @thondankani , @am_kathir & @ivasuuu. @sash041075@chakdyn@ynotxworld@music_ynot@onlynikilpic.twitter.com/FKd126eBsI
— Y Not Studios (@StudiosYNot) December 22, 2021
Related Tags :
Next Story