ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வீடியோ வெளியிட்ட கவர்ச்சி நடிகை சன்னி லியோன்...!


ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வீடியோ வெளியிட்ட கவர்ச்சி நடிகை சன்னி லியோன்...!
x
தினத்தந்தி 22 Dec 2021 3:24 PM IST (Updated: 22 Dec 2021 3:24 PM IST)
t-max-icont-min-icon

நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

நடிகை சன்னி லியோன் கொரோனா தடுப்பூசி குறித்து பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சர்ச்சை நடிகையான சன்னி லியோன் தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். வீரமாதேவி என்ற சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு, கன்னட, மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் இயக்குநர் வடிவுடையான் இயக்கத்தில் 'வீரமாதேவி' எனும் படத்தில் நடிப்பதற்காக சன்னிலியோன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் இயக்குநர் யுவன் இயக்கத்தில் 'ஓ மை கோஸ்ட்' படத்திலும் சசிகுமார் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் சன்னி லியோன் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் சிறைபட்டிருப்பதை குறிக்கும் வகையில் நடிகை சன்னிலியோன் சிறைபோல் இருக்கும் கம்பிகளுக்கு பின்னால் ஒளிந்திருப்பதை போன்று நடித்து ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கொரோனா சிறையில் இருந்து தப்பிக்க ஒரே தீர்வு கொரோனா தடுப்பூசிதான். அதைப் போட்டுக்கொண்டால் வேறென்ன? கொண்டாட்டம்தான் எனக் கூறுவதை போல்  உள்ளது. சன்னி லியோன் பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story