மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படம்..!


மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படம்..!
x
தினத்தந்தி 23 Dec 2021 3:59 PM IST (Updated: 23 Dec 2021 3:59 PM IST)
t-max-icont-min-icon

மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த திரைப்படத்தை இயக்க தயாராக உள்ளார் இயக்குனர் வெங்கட்பிரபு. 'விபி 10' (VP 10) என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து கோமாளி திரைப்படத்தில் நடித்த சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரேம்ஜி இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். 

இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

நடிகர் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபீசில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

Next Story