அதர்வா முரளி நடிக்கும் ‘டிரிக்கர்’


அதர்வா முரளி நடிக்கும் ‘டிரிக்கர்’
x
தினத்தந்தி 31 Dec 2021 2:19 PM IST (Updated: 31 Dec 2021 2:19 PM IST)
t-max-icont-min-icon

"தூண்டல் என்ற கருவின் அடிப்படையில் ஒரு அருமையான திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம்’’ என்கிறார், டைரக்டர் சாம் ஆண்டன்.

‘‘டிரிக்கர் என்றால் சுண்டி இழுக்கப்படும் விசை, உந்தி தள்ளுதல் என இரண்டு பொருள் பட எடுத்துக்கொள்ளலாம். தூண்டல் என்றும் சொல்லலாம். ‘டிரிக்கர், அனைவரின் வாழ்விலும் இன்றியமையாத விளைவுகள் தரும் ஒரு அம்சமாக இருக்கிறது. இந்த தூண்டல் நல்ல விஷயத்துக்காக நடைபெறும்போது, அது அனைவரின் வாழ்வுக்கும் நன்மை உண்டாக்குகிறது.

இந்த உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் திரைப்படைப்பாக அதர்வா முரளி நடிக்கும் ‘டிரிக்கர்’ படம் உருவாக இருக்கிறது. தூண்டல் என்ற கருவின் அடிப்படையில் ஒரு அருமையான திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம்’’ என்கிறார், டைரக்டர் சாம் ஆண்டன்.

‘‘அதர்வா முரளி-சாம் ஆண்டன் கூட்டணியில், ‘டிரிக்கர்’ படம் முழுக்க முழுக்க வர்த்தக ரீதியிலான திரைப்படமாக அமையும்’’ என்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர்கள் பிரதீக் சக்ரவர்த்தி, சுருதி நல்லப்பா.

இந்தப் படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார். சீதா, அருண்பாண்டியன், முனீஷ்காந்த், சின்னிஜெயந்த் ஆகியோரும் நடிக்கிறார்கள்.


Next Story