'அஜித் சார், இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல' - புகழ் நெகிழ்ச்சி பதிவு..!


அஜித் சார், இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல - புகழ் நெகிழ்ச்சி பதிவு..!
x
தினத்தந்தி 3 Jan 2022 9:52 AM GMT (Updated: 2022-01-03T15:22:24+05:30)

'வலிமை' திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகர் புகழ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 13-ந்தேதி 'வலிமை' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

புத்தாண்டை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படத்தின் டிரைலர் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த திரைப்படத்தில் 'குக் வித் கோமாளி' தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான வலிமை படத்தின் டிரைலரில் நடிகர் அஜித்துடன் புகழ் இடம்பெற்ற காட்சிகள் இருந்தன. இதை புகழின் ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்த நிலையில் 'வலிமை' திரைப்படத்தில் நடித்தது குறித்து புகழ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், 'அஜித் சார், இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல. 

உங்க கூட பயணிக்கற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள். என்றும் அன்பும், நன்றிகளுடன் புகழ்' என்று கூறி நடிகர் அஜித்துடன் இணைந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிரந்து பதிவிட்டுள்ளார்.

மேலும், நடிகர் புகழ், சூர்யா நடிக்கும் 'எதற்கும் துணிந்தவன்', விஜய் சேதுபதியின் 46 வது படம், யோகி பாபு நடிக்கும் 'காக்டெய்ல்' மற்றும் அஸ்வின் குமாரின் 'என்ன சொல்ல போகிறாய்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Next Story