தன் 36-வது பிறந்தநாளில் புதிய படத்தின் போஸ்டர்களை வெளியிட்ட தீபிகா படுகோனே


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 Jan 2022 2:39 PM IST (Updated: 6 Jan 2022 2:39 PM IST)
t-max-icont-min-icon

ஷகுன் பத்ரா இயக்கத்தில் உருவாகிய புதிய படத்தின் போஸ்டர்களை தனது ரசிகர்களுக்காக வெளியிட்டார்.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே தனது 36-வது பிறந்தநாளை முன்னிட்டு ஷகுன் பத்ரா இயக்கத்தில் உருவாகி வரும் கெஹ்ரையான் படத்தின் போஸ்டர்களை தனது ரசிகர்களுக்காக வெளியிட்டார். 

தீபிகா தனது இன்ஸ்டாகிராமில் சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே மற்றும் தைரிய கர்வா ஆகியோரின் முக்கிய தோற்றங்களை பதிவிட்டுள்ளார். அதில் ரசிகர்களாகிய நீங்கள் எங்களுக்கு பொழிந்த அன்பிற்கு ஒரு சிறிய பிறந்தநாள் பரிசு! என கூறியுள்ளார். 

இந்தத் திரைப்படம் இளம் தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை எடுத்து கூறுகிறது. இதில் நசிருதீன் ஷா மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தர்மா புரொடசன்ஸ், வியாகாம் 18 மற்றும் ஷகுன் பத்ராவின் ஜோஸ்கா பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் பிப்ரவரி 11, 2022 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

1 More update

Next Story