சினிமா செய்திகள்

300 படங்களுக்கு மேல் சண்டை பயிற்சி அளித்த ஸ்டண்ட் மாஸ்டர் + "||" + Stunt Master Shiva has trained over 300 films

300 படங்களுக்கு மேல் சண்டை பயிற்சி அளித்த ஸ்டண்ட் மாஸ்டர்

300 படங்களுக்கு மேல் சண்டை பயிற்சி அளித்த ஸ்டண்ட் மாஸ்டர்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பிரெஞ்சு ஆகிய 6 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர், ஸ்டண்ட் சிவா.
இவர் அளித்த பேட்டி வருமாறு:

கேள்வி: உங்கள் முதல் படம் எது?

பதில்: விஜய் நடித்த ‘லவ் டுடே.’

கே: உங்கள் அனுபவத்தில் மிக துணிச்சலான கதாநாயகன் யார்?

ப: துணிச்சல் இருந்தால்தான் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும். அந்த வகையில் எல்லா கதாநாயகர்களும் துணிச் சலானவர்கள்தான்.

கே: சொந்த ஊர் எது?

ப: சென்னை.

கே: சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

ப: ‘பைக்’ மெக்கானிக்காக இருந்தேன்.