வடிவேல் பாடல்களுக்கு எதிர்பார்ப்பு


வடிவேல் பாடல்களுக்கு எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 16 Jan 2022 9:09 AM GMT (Updated: 2022-01-16T14:39:35+05:30)

சந்தோஷ் நாராயணன் இசையில் தயாராக இருக்கும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்துக்கான பாடல்களை லண்டனில் உருவாக்கி வருகிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் பாடல்களுக்கு ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. (பாரீஸ் ஜெயராஜ், கர்ணன், ஜெகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களின் பாடல்கள் உதாரணம்). அதனால் அவர் இசையில் தயாராக இருக்கும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்துக்கான பாடல்களை லண்டனில் உருவாக்கி வருகிறார்.

இந்த படத்தில், வடிவேல் சொந்த குரலில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அவர் நடித்த சில படங்களில் ஏற்கனவே பாடியுள்ளார். அந்த பாடல்களுக்கு வரவேற்பு இருந்ததன் காரணமாக ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திலும் அவரை பாட வைத்து இருக்கிறார்கள். படத்தின் கதாநாயகனாக வடிவேல் நடிக்கிறார். கதாநாயகி சிவாங்கி. இவர்களுடன் ஆனந்தராஜ், விக்னேஷ் காந்த் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சுராஜ் இயக்குகிறார். சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.‘‘இந்த படத்தில் இசையும், பாடல்களும் முக்கியத்துவம் பெறுவதால் லண்டனில் பாடல்களை பதிவு செய்து, வடிவேலுவை லண்டனுக்கு வரவழைத்து ஒரு பாடலை பதிவு செய்தோம்’’ என்கிறார், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.


Next Story