சினிமா செய்திகள்

என் மகளை பார்க்க முடியவில்லை - ரேகா கண்ணீர் + "||" + Can't see my daughter - Actress Rekha

என் மகளை பார்க்க முடியவில்லை - ரேகா கண்ணீர்

என் மகளை பார்க்க முடியவில்லை - ரேகா கண்ணீர்
80, 90-களில் முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த பிரபல நடிகை ரேகா, தனது மகளை பார்க்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.
நடிகை ரேகாவின் ஒரே மகள் அமெரிக்காவில் படித்து வந்தார். படிப்பை முடித்துக் கொண்ட பின், அவர் அங்கேயே வேலை பார்த்து வருகிறார். கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அவரால் சென்னை திரும்ப முடியவில்லை. இதுபற்றி ரேகா கண்ணீர் மல்க கூறியதாவது:-

‘‘என் மகள் நியூயார்க்கில் படித்து முடித்துவிட்டு, இப்போது வேலையில் சேர்ந்து இருக்கிறாள். மகளை தனியே விட்டுவிட்டு, சுமார் ஒன்றரை ஆண்டாக ‘விசா’ கிடைக்காமல், நானும் என் கணவரும் கவலையுடன் இருக்கிறோம்.

என் மகள் அமெரிக்காவில் படித்துவிட்டு அங்கேயே வேலை செய்வதை பார்த்து சிலர் பொறாமைப்படுகிறார்கள். நான் யார் மீதும் பொறாமைப் படுவதில்லை. எப்போதும் இளமையாக இருப்பதாக உணர்கிறேன். அதனால்தான் இந்த தலைமுறை நடிகைகளுடன் போட்டி போட முடிகிறது.’’

இவ்வாறு ரேகா கூறினார்.