ஜோதிகாவின் 51-வது படம்
51-வது படத்தில் நடிக்க ஜோதிகா தயாராகி உள்ளார். சில இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லி உள்ளனர்.
ஜோதிகா திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்துவிட்டு, மீண்டும் 36 வயதினிலே படம் மூலம் நடிக்க வந்தார். தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.
ஜோதிகா நடித்த 50-வது படமான உடன்பிறப்பே சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்து 51-வது படத்தில் நடிக்க ஜோதிகா தயாராகி உள்ளார். சில இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லி உள்ளனர்.
கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா ஆகிய படங்களை இயக்கிய பிரியா சொன்ன கதை பிடித்துள்ளதாகவும், அதில் நடிக்க ஜோதிகா முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story