தாமதமாகும் விஜய் படம்


தாமதமாகும் விஜய் படம்
x
தினத்தந்தி 3 Feb 2022 3:49 PM IST (Updated: 3 Feb 2022 3:49 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் உள்ளிட்ட சில காரணங்களால் படப்பிடிப்பை மேலும் சில வாரங்களுக்கு தள்ளிவைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றன. அடுத்து தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ளது. இது விஜய்க்கு 66-வது படம். குடும்ப கதையம்சம் கொண்ட அதிரடி சண்டை படமாக தயாராகிறது.

கடந்த இருபது வருடங்களில் இதுபோன்ற கதையை கேட்டது இல்லை என்றும், இது தனது திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்றும் விஜய்யே நெகிழ்ச்சியோடு தெரிவித்ததாக படக்குழுவினர் கூறுகிறார்கள்.

இந்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்கவும், தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டுவரவும் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனா பரவல் உள்ளிட்ட சில காரணங்களால் படப்பிடிப்பை மேலும் சில வாரங்களுக்கு தள்ளிவைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கதாநாயகி உள்ளிட்ட இதர நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது.


Next Story