‘105 கிலோவில் இருந்து 70 கிலோ’ - நடிகர் சிம்புவின் எடைக்குறைப்பு ரகசியம்


‘105 கிலோவில் இருந்து 70 கிலோ’ - நடிகர் சிம்புவின் எடைக்குறைப்பு ரகசியம்
x
தினத்தந்தி 4 Feb 2022 1:23 PM IST (Updated: 4 Feb 2022 1:23 PM IST)
t-max-icont-min-icon

தனது உடல் எடையை குறைத்தது எப்படி என்பது குறித்து நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தமிழ் திரைத்துறையில் நன்கு நடனம் ஆடக்கூடிய ஒரு சில நடிகர்களில் சிம்புவும் ஒருவர் ஆவார். அவர் ஆரம்ப காலங்களில் நடித்த திரைப்படங்களிலும், வல்லவன், சிலம்பாட்டம், போடா போடி உள்ளிட்ட படங்களிலும் சிம்புவின் நடனம் தனி கவனத்தை பெற்று இருக்கும். அதற்கு ஏற்ற வகையில் தனது உடல் எடையையும் அவர் சீராக வைத்திருந்தார்.

இருப்பினும் சில வருட இடைவெளிக்குப் பிறகு ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் அவர் மீண்டும் தோன்றிய போது அவரது உடல் எடை சற்றே அதிகரித்து காணப்பட்டது. அதைத் தொடர்ந்து ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வெளியான போது சுமார் 105 கிலோ எடையுடன் பருமனான கதாநாயகனாக திரையில் தோன்றினார். 

இதன் காரணமாக சமூக வலைதளங்களில் உடல் எடைக்காக நடிகர் சிம்பு அதிக விமர்சனத்திற்கு ஆளானார். இதையடுத்து உடல் எடையை குறைப்பதற்காக தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சிம்பு, அதனை சாதித்தும் காட்டினார். கடந்த ஆண்டு வெளியான ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தில் வெகுவாக உடல் எடையை குறைத்து அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த நிலையில் 105 கிலோவில் இருந்து 70 கிலோ வரையிலான தனது உடல் எடைக்குறைப்பின் ரகசியம் குறித்த வீடியோ ஒன்றை நடிகர் சிம்பு தனது யூ-டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது எடைக்குறைப்புக்கு பின்னால் இருக்கும் கடின உழைப்பு பற்றிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

Next Story