இலியானாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்


இலியானாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்
x
தினத்தந்தி 6 Feb 2022 2:24 PM IST (Updated: 6 Feb 2022 2:24 PM IST)
t-max-icont-min-icon

சிவப்பு நிற உடையில் பளிச்சிடும் தனது புகைப்படத்தை இலியானா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இலியானா, அதில் குண்டான தோற்றத்தில் இருந்தது கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய சினிமாவில் இடுப்பழகி என்ற பெயர் பெற்றவர் இலியானா. இவருக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் ‘நண்பன்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்தார்.

கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை இலியானா தவிர்த்து வந்தார். அதேவேளை சமூக வலைதளங்களில் மட்டும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். பழைய புகைப்படங்களையும், புதிதாக எடுத்த புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிட்டும் வந்தார். படங்கள் வராதபோதும், இலியானாவின் ரசிகர்கள் அவரது புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வந்தனர்.

இந்தநிலையில் சிவப்பு நிற உடையில் பளிச்சிடும் தனது புகைப்படத்தை இலியானா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காரணம் உள்ளத்தை அள்ளும் மெலிந்த தேகம் கொண்ட இலியானா, அதில் குண்டான தோற்றத்தில் இருந்தது தான். சதைப்பிடிப்பான தேகத்தில் உள்ள தனது புகைப்படத்துடன் சில வாசகங்களையும் இலியானா பதிவிட்டுள்ளார். அதில், ‘உடம்பை ஒல்லியாக காட்டும், வெள்ளையாக காட்டும் சில செயலிகளை (ஆப்) நான் செல்போனில் இருந்து நீக்கிவிட்டேன். என் உடலின் ஒவ்வொரு அசைவுகளையும், வளைவுகளையும் நான் ரசிக்கிறேன். இதுதான் நான்’ என பதிவு செய்துள்ளார்.


Next Story