அரை மணி நேரம் நடிக்க ரூ.1 கோடி கேட்ட நடிகை ராஷ்மிகா
தெலுங்கு படத்தில் அரைமணி நேரம் நடிக்க ராஷ்மிகாவை அணுகியபோது ரூ.1 கோடி சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்தாராம்.
சமீபத்தில் வளர்ந்த நடிகைகளில் சிலர் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்டதாக தயாரிப்பாளர்கள் முணுமுணுக்கின்றனர். ரூ.3 கோடி வாங்கிய பூஜா ஹெக்டே ரூ.5 கோடி கேட்கிறாராம். இவர் தற்போது விஜய் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார். தற்போது சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்துக்கு பிறகு ராஷ்மிகா மார்க்கெட் உயந்துள்ளது.
புஷ்பா படத்துக்கு முன்பு ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய ராஷ்மிகா இப்போது ரூ.4 கோடி கேட்கிறாராம். இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தில் முதல் மந்திரியாக வரும் ராம்சரணை பேட்டி எடுக்கும் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் அரைமணி நேரம் நடிக்க ராஷ்மிகாவை அணுகியபோது ரூ.1 கோடி சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்தாராம். ஆனாலும் வேறு வழியில்லாமல் அந்த தொகையை கொடுக்க தயாரிப்பாளர் சம்மதித்ததாக கூறுகின்றனர்.
Related Tags :
Next Story