மராத்திய சினிமாவில் நிமிஷா ஷஜயன்
மலையாள சினிமாவில் சிறந்த நடிகையாக வளர்ந்து வருபவர், நிமிஷா ஷஜயன். 2017-ம் ஆண்டு ‘கேர் ஆப் சாய்ரா பானு’ என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர், அதே வருடம் வெளியான ‘தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இது மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படமாக அமைந்தது.
இதையடுத்து 2018-ம் ஆண்டு டொவினோ தாமஸ் ஜோடியாக நடித்த ‘ஒரு குப்ரசித பையன்’ என்ற படத்தில், கேரள அரசின் சிறந்த நாயகிக்கான விருதை, நிமிஷா ஷஜயன் பெற்றார்.
2021-ம் ஆண்டு வெளிவந்த ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’, ‘நயாட்டு’ ஆகிய படங்களும் அவரது நடிப்பை வேறு தளத்திற்கு இட்டுச் சென்றன.
இதையடுத்து பாலிவுட்டில் ‘வீ ஆர்’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதே போல ‘புட் பிரிண்ட்ஸ் ஆன் வாட்டர்’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ‘ஹவாஹவாய்’ என்ற மராத்திய படத்திலும் நடித்து முடித்திருக்கிறார், நிமிஷா ஷஜயன்.
மராத்திரியில் முன்னணி இயக்குனராக இருக்கும் மகேஷ் திலகர் இயக்கியிருக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
25 வயதே ஆன நிமிஷா ஷஜயன், மிகக் குறுகிய காலகட்டத்திலேயே சிறந்த நடிகை என்ற பெயருடன், இந்தியாவின் பிற மொழி சினிமாக்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Related Tags :
Next Story