ரேவதி இயக்கும் படத்தில் கஜோல்
நடிகை ரேவதி இயக்கும் புதிய படத்தில் நடிகை கஜோல் நடிக்கவிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரேவதி. மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ரேவதி ஏற்கனவே 2002-ல் மித்ர மை பிரண்ட் என்ற ஆங்கில படத்தை இயக்கினார். தொடர்ந்து இந்தியில் பிர் மைலேஞ்ச், மும்பை கட்டிங், மலையாளத்தில் கேரள கபே படங்களையும் டைரக்டு செய்தார். தற்போது 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குனராக களம் இறங்குகிறார்.
கஜோல் நடிக்கும் புதிய இந்தி படத்தை அவர் டைரக்டு செய்ய உள்ளார். இந்த படத்துக்கு சலாம் வெங்கி என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து தயாராகிறது. வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்ளும் பெண் கதாபாத்திரத்தில் கஜோல் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகிறது.
கஜோல் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று நாங்கள் சொல்ல வேண்டிய கதைக்கான பயணத்தை தொடங்கி இருக்கிறோம். இந்த உண்மை கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story