கார் கேட்ட மகளுக்கு பாடம் கற்றுக்கொடுத்த நடிகர் ரகுமான்
நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம் கற்று தந்துள்ளார்.
நடிகர் ரகுமானுக்கு 2 மகள்கள். மூத்த மகளுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. இளைய மகள் கல்லூரியில் படிக்கிறார். இவருக்கு கார் ஓட்டுவதில் அலாதி பிரியம். 18 வயதை கடந்த அவர் தனக்கு சொந்தமாக கார் வேண்டும் என்று ஆசைப்பட்டார். தனது ஆசையை அப்பாவிடம் தெரிவித்தார்.
அதைக்கேட்ட ரகுமான், மகளுக்கு ஒரு ‘டெஸ்ட்’ வைத்துள்ளார். ‘‘முன்பெல்லாம் கார் ஓட்டுபவர்களுக்கு காரை பற்றிய அடிப்படை பிரச்சினைகள் தெரியும். கார் டயர் ‘பஞ்சர்’ ஆனால் அதை கழற்றி மாட்ட தெரிந்திருக்க வேண்டும். காரை ஓட்டுபவரே டயரை கழற்றி மாட்டி விடுவார்.
கார் ஓடிக்கொண்டிருக்கும்போது பாதி வழியில் நின்றுவிட்டால், அதை பழுது பார்க்க தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இந்த காலத்தில் எல்லோரும் அடுத்தவர்களை சார்ந்தே வாழ்கிறார்கள். கார் டயரை தனி ஆளாக கழற்றி மாட்ட தெரியுமா, சொல். கார் வாங்கி தருகிறேன்’’ என்று மகளிடம் ரகுமான் கூறினார்.
ரகுமானின் மகளும் அப்பாவின் அறிவுரையை ஏற்று, கார் டயரை கழற்றி மாட்டினார். உடனே மகளுக்கு ரகுமான் கார் வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்.
Related Tags :
Next Story