‘கடைசி விவசாயி’ படம் வெளியாக விஜய் சேதுபதி ரூ.8 கோடி உதவி


‘கடைசி விவசாயி’ படம் வெளியாக விஜய் சேதுபதி ரூ.8 கோடி உதவி
x
தினத்தந்தி 13 Feb 2022 3:17 PM IST (Updated: 13 Feb 2022 3:17 PM IST)
t-max-icont-min-icon

கடைசி விவசாயி படம் வெளியாக விஜய் சேதுபதி ரூ.8 கோடி கொடுத்து படத்தை திரைக்கு கொண்டுவர உதவினார்.

விஜய் சேதுபதி நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். நண்பர்களுக்காக சில படங்களில் சம்பளமே வாங்காமல் இலவசமாக நடித்துக்கொடுக்கிறார். அப்படி அவர் சமீபத்தில் இலவசமாக நடித்துக்கொடுத்த படம் ‘கடைசி விவசாயி.’ அப்படியிருந்தும் அந்த படம் திரைக்கு வரமுடியாமல் தவித்தது. ரூ.8 கோடி இருந்தால் படம் திரைக்கு வரும் என்ற நிலையில், விஜய் சேதுபதி உதவ முன்வந்தார். ரூ.8 கோடி கொடுத்து படத்தை திரைக்கு கொண்டுவர உதவினார்.

‘‘விஜய் சேதுபதி உதவவில்லை என்றால், ‘கடைசி விவசாயி’ திரைக்கு வந்திருக்க மாட்டார்’’ என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

Next Story