மீண்டும் ரஜினிகாந்த் ஜோடி ஐஸ்வர்யா ராய்?
ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் பரவி வருகிறது.
ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் வெளியானது. அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக அறிவித்து உள்ளனர். இது அவருக்கு 169-வது படம். நெல்சன் ஏற்கனவே நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படங்களை இயக்கியுள்ளார். தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அதிரடி குடும்ப கதையம்சம் உள்ள படமாக தயாராவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க உள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது.
நாயகியாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் பரவி வருகிறது. இதனை படக்குழுவினர் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. ஐஸ்வர்யா ராய் ஏற்கனவே எந்திரன் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து இருந்தார். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
Related Tags :
Next Story