‘ஆஹா’ ஓ.டி.டி. தளம் அறிமுகம்
தென்னிந்திய திரையுலகில் ‘ஆஹா’ ஓ.டி.டி. தளம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழாவில் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
‘ஆஹா’ ஓ.டி.டி. தளம்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமான திரைத்துறையிலும் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஓ.டி.டி. தளம் என்ற புதிய தொழில்நுட்பத்துக்கு மிகுந்த வரவேற்பு ரசிகர்களிடையே இருக்கிறது.
இந்தநிலையில் ‘ஆஹா’ என்ற பிரபல சினிமா நிறுவனம் ஓ.டி.டி. தளத்தில் கால்தடம் பதித்துள்ளது. இதன் அறிமுக விழா, சென்னையில் நடந்தது.
சினிமா பிரபலங்கள் பங்கேற்பு
விழாவில் நடிகர்கள் சரத்குமார், ஜெயம் ரவி, எஸ்.ஜே.சூர்யா, சிபிராஜ், அசோக் செல்வன், ஆர்.ஜே.பாலாஜி, கவின், நடிகைகள் ராதிகா, குஷ்பு, நிக்கி கல்ராணி, இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரஞ்சித், சிறுத்தை சிவா, பாலாஜி மோகன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, அல்லு அரவிந்த், ஆர்.பி.சவுத்ரி, புஷ்பா கந்தசாமி உள்பட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story