பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியை சந்தித்த ரம்யாகிருஷ்ணன்
சவுகார் ஜானகியை பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நேரில் சந்தித்து உரையாடினார்.
மறைந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தவர் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி. இவர் தனது 18-வது வயதில் சினிமாவில் அடியெடுத்து வைத்து தொடர்ந்து நடித்து வருகிறார். சவுகார் ஜானகிக்கு தற்போது 90 வயது ஆகிறது. திரையுலகில் சவுகார் ஜானகி ஆற்றிய சேவைக்காக மத்திய அரசு ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கி கவுரவித்தது.
இந்த நிலையில் சவுகார் ஜானகியை பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நேரில் சந்தித்து உரையாடினார். அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். சவுகார் ஜானகி சமைத்து பரிமாறிய மதிய உணவையும் சாப்பிட்டார். இந்த புகைப்படங்களையும், வீடியோவையும் ரம்யா கிருஷ்ணன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவை தற்போது வைரலாகி வருகின்றன. ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். ரஜினியின் படையப்பா படத்தில் நடித்த நீலாம்பரி, பாகுபலி படத்தில் நடித்த ராஜமாதா சிவகாமி கதாபாத்திரங்கள் பெயர் வாங்கி கொடுத்தன.
Related Tags :
Next Story