ரஜினியின் 170-வது படம்


ரஜினியின் 170-வது படம்
x
தினத்தந்தி 21 Feb 2022 3:57 PM IST (Updated: 21 Feb 2022 3:57 PM IST)
t-max-icont-min-icon

ரஜினி நடிக்கும் 170-வது படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது ரஜினிக்கு 169-வது படம். படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேசிவருவதாக கூறப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஏற்கனவே நயன்தாராவின் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படங்கள் வந்துள்ளன. தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் 2018-ல் வெளியான கனா படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோர் நடித்து இருந்தனர். தற்போது உதயநிதி நடிக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கி வருகிறார். மான் கராத்தே, ரெமோ, மரகத நாணயம் ஆகிய படங்களில் அருண்ராஜா காமராஜ் நடித்தும் இருந்தார். ரஜினியின் கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடலையும் எழுதி இருந்தார். ரஜினி, அருண்ராஜா கூட்டணியில் உருவாகும் படத்துக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.

1 More update

Next Story