பிரபல தெலுங்கு நடிகரை திருமணம் செய்கிறாரா ராஷ்மிகா?


பிரபல தெலுங்கு நடிகரை திருமணம் செய்கிறாரா ராஷ்மிகா?
x
தினத்தந்தி 22 Feb 2022 2:36 PM IST (Updated: 22 Feb 2022 2:36 PM IST)
t-max-icont-min-icon

ராஷ்மிகாவும், முன்னணி தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் பிரபல கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கில் நடித்த டியர் காமரேட் படம் தமிழிலும் வந்தது. அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வசூல் குவித்த புஷ்பா படத்திலும் கதாநாயகியாக வந்தார்.

ராஷ்மிகாவும், முன்னணி தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளிவந்தன.

இதனை ராஷ்மிகா மறுத்து இருந்தார். தனக்கு திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு போதிய வயது இல்லை என்றும், திருமணத்தை பற்றி யோசிக்க நேரம் இல்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் திருமணம் செய்துகொள்ள தயாராகி இருப்பதாகவும், இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளது என்றும் தெலுங்கு இணையதளங்களில் நேற்று தீயாக தகவல் பரவி உள்ளது. திருமண தேதியை ரகசியமாக வைத்துள்ளனர் என்றும் கூறப்பட்டது.

ஆனாலும் இந்த தகவலை ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் உறுதிப்படுத்தவில்லை. ராஷ்மிகா தற்போது அமிதாப்பச்சனுடன் குட்பை மற்றும் மிஷன் மஜ்னு ஆகிய இந்தி படங்களில் நடித்து வருகிறார்.


Next Story