நடிகை ஸ்ருதிஹாசனுக்கு கொரோனா தொற்று..!
நடிகை ஸ்ருதிஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரானாவின் 3-வது அலை பரவத் தொடங்கியது. ஜனவரி மாதத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. நேற்று தமிழகத்தில் ஒருநாள் கொரானா பாதிப்பு 500-க்கும் கீழ் குறைந்துள்ளது.
சினிமா பிரபலங்கள் பலருக்கும் இந்த 3-வது அலையில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது நடிகை ஸ்ருதிஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'அனைவருக்கும் வணக்கம். ஒரு விரைவான மகிழ்ச்சியற்ற அப்டேட். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் குணமடைந்து வருகிறேன், திரும்பி வர காத்திருக்க முடியாது. நன்றி விரைவில் சந்திப்போம் அன்பர்களே' என்று தெரிவித்துள்ளார்.
— shruti haasan (@shrutihaasan) February 27, 2022
Related Tags :
Next Story