மீண்டும் நடிக்க வருகிறார் சாயிஷா


மீண்டும் நடிக்க வருகிறார் சாயிஷா
x
தினத்தந்தி 27 Feb 2022 3:16 PM IST (Updated: 27 Feb 2022 3:16 PM IST)
t-max-icont-min-icon

குழந்தை பெற்றதற்கு பிறகு மீண்டும் நடிப்பதில் சாயிஷா ஆர்வம் காட்டி வருகிறார். ஆர்யா-சாயிஷா கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்கள்.

ஜெயம் ரவி ஜோடியாக ‘வனமகன்' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா. அதனைத் தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம்', ‘ஜூங்கா', ‘கஜினிகாந்த்', ‘காப்பான்', ‘டெடி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவரது அழகும், கலக்கலான நடனமும் ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டன.இதில் ‘கஜினிகாந்த்' படத்தில் நடித்தபோது ஆர்யாவுக்கும், சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்தது. காதல் கைகூடி திருமணத்தில் முடிந்தது. சமீபத்தில் ஆர்யா-சாயிஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பெற்றதற்கு பிறகு மீண்டும் நடிப்பதில் சாயிஷா ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக கதைகளையும் ஆர்வமாக கேட்டு வருகிறார். ‘கஜினிகாந்த்', ‘டெடி' படங்களைத் தொடர்ந்து ஆர்யா-சாயிஷா கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. சாயிஷா, சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடற்கரையில் உலாவரும் தனது சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்களை சாயிஷா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள், அவரது அழகை புகழ்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.


Next Story