நிக்கி கல்ராணி அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்
சமூக வலைதளங்களிலும் நிக்கி கல்ராணியின் அழகை புகழ்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘டார்லிங்' என்ற நகைச்சுவை கலந்த திகில் படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், நிக்கி கல்ராணி.
‘யாகவரயினும் நாகாக்க, கோ2', ‘கலகலப்பு-2', ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்', ‘கடவுள் இருக்கான் குமாரு', ‘மரகத நாணயம்', ‘ஹர ஹர மகாதேவகி', ‘ராஜவம்சம்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இது தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஆதி ஜோடியாக ‘சிவுடு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி வருகிறது.
படங்களைப் போலவே சமூக வலைதளங்களிலும் நிக்கி கல்ராணி பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது தனது வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டும் கவனம் ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது சில படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மின்னொளி வெளிச்சத்தில் மின்மினிப்பூச்சியாக ஜொலிக்கும் அவரது அழகை கண்ட ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர். ‘என்ன அழகு... எத்தனை அழகு...' என்று பாடல்களை பாடி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். நிக்கி கல்ராணியின் அழகை புகழ்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதனால் நிக்கி கல்ராணி குளிர்ந்து போயுள்ளாராம்.
Related Tags :
Next Story